Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.3.03 கோடி செலவில் சத்தியமங்கலத்தில் வாரச்சந்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் நகராட்சி 11வது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.03 கோடி செலவில் 128 கடைகளுடன் கூடிய புதிய வாரச்சந்தை வளாகம் கட்டப்பட்டது. புதிய வார சந்தையினை நேற்று ஈரோடு சோலாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் வாரச்சந்தை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ஜானகி ராமசாமி தலைமையில்,நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் முன்னிலையில் குத்து விளக்கு ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சரவணன்,நாகராஜ்,நந்தினி,ஜெயந்தி,புஷ்பவள்ளி,வேலுச்சாமி,குர்ஷித், ஹிதாயத்துன்னிஷா, லட்சுமி, பேபி, செல்வி, குமார், சீனிவாசன், லட்சுமணன், புவனேஸ்வரி, உமா,திமுக நகர துணை செயலாளர்கள் நீலமலை கார்த்தி,மணிகண்டன்,மாவட்ட பிரதிநிதிகள் கேஎம்எஸ் முருகன்,பவுஜில் ஹக், பொருளாளர் பொன்னுசாமி,திமுக நகர நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள்,வணிகர் சங்க பிரதிநிதிகள்,வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பயனாளிகளுக்கு வாகன வசதி

ஈரோடு சோலாரில் நடந்த அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் பயன்பெறும் பயனாளிகள் பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியார் வாகனங்கள் மூலம் விழா நடந்த மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.அங்கு அவர்களின் இருக்கையிலேயே குளிர்பானம், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.விழா பந்தல் சுற்றுப்புறத்தில் அடிப்படை வசதிகளும் போதுமான அளவிற்கு செய்யப்பட்டிருந்தது. மேலும், விழா முடிந்தும் பயனாளிகள் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலமாக மீண்டும் அவர்களது இல்லங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீசார் பாதுகாப்பு

அரசு விழாவுக்கு வந்த பயனாளிகள் மட்டுமில்லாமல் அதிகாரிகள், பத்திரிகை, ஊடகவியலாளர்கள் என அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே விழா மேடைக்கு அனுமதிக்கப்பட்டனர். விழா நடந்த இடம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஐஜி செந்தில்குமார், டிஐஜி சசிமோகன், எஸ்பி சுஜாதா தலைமையில் 8 மாவட்ட போலீஸ் அதிகாரிகள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.