ஈரோடு, செப். 24: தெற்மேற்கு பருவமழை மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதனடிப்படையில், ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக தினமும் மாலையில் தொடங்கி, இரவு வரை மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் ஈரோடு நகரில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது.மழை பொழிவு இல்லை.நேற்று காலை 8 மணி நிலவரத்தின்படி, மாவட்டத்தின் பிற பகுதிகளான கொடுமுடியில் 7.20 மில்லி மீட்டரும், வறட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் 9.40 மில்லி மீட்டரும் என 2 இடங்களில் மட்டும் லேசான மழை பெய்திருந்தது.