ஈரோடு, செப். 24: ஈரோட்டில் வாக்கு திருட்டினை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டினை கண்டித்தும், நமது வாக்குரிமையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ஈபி ரவி, துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மண்டல தலைவர் ஜாபர் சாதிக், பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், சிறுபான்மை பிரிவு பாஷா, ஈரோடு கெளதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.