அந்தியூர், ஆக.19: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 34 லட்சம் மதிப்பில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், கலெக்டர் கந்தசாமி, மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முன்னிலையில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் கணேசன், செயல் அலுவலர் காசிலிங்கம், இளநிலை பொறியாளர் சம்பந்தமூர்த்தி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் செந்தில் கணேஷ், பேரூராட்சி துணைத் தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
+
Advertisement