Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

மொடக்குறிச்சி, ஆக.18: சின்னியம்பாளையம் லட்சுமி நகரில் வெங்கடாசலம் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (46). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி மகேஸ்வரி (44). இவர் புஞ்சை காளமங்கலம் கூட்டுறவு சொசைட்டியில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் கடந்த வியாழனன்று குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி மற்றும் ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.