ஈரோடு, அக்.12: ஈரோட்டில் கஞ்சா வழக்கில் சிக்கிய 2 இளைஞர்கள் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டுள்ளது. ஈரோட்டில் கொலை முயற்சி அடிதடி மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல குற்றவாளிகளான சூரம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22), சூரம்பட்டிவலசு அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பூபதி (33), ஆகிய இருவரையும், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கஞ்சா வழக்கில் கைது செய்த போலீசார், ஈரோடு கிளை சிறையில் அடைத்திருந்தனர்.
இந்த நிலையில், 2 பேர் மீது குண்டாஸ் போட வேண்டும் என மாவட்ட எஸ்.பி சுஜாதா, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தார். அதற்கு மாவட்ட கலெக்டரும் பரிந்துரை செய்தார். அதன்படி, மணிகண்டன், பூபதி மீது, கஞ்சா வழக்கு தொடர்பாக குண்டாஸ் வழக்கு போடப்பட்டு, அவர்களை ஈரோடு கிளை சிறையில் இருந்து மாற்றி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.