பவானி, டிச.3: பவானியை அடுத்த ஜம்பை-நல்லிபாளையம் சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பவானி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் ஜம்பை-நல்லிபாளையம் சாலை ஒரு வழித்தடத்தை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணி ரூ.1.10 கோடியில் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சாலையோரத்தில் மண் அகற்றப்பட்டு, ஜல்லிகள் கொட்டப்பட்டது.
இப்பணிகளை திருப்பூர் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் சாந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பவானி உதவி கோட்ட பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர் பழனிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

