மார்த்தாண்டம், ஜூலை 9: மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டது. குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட வெட்டுவெந்நி மற்றும் மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடந்த வாரம் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த நிலையில் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் ஆக்ரமிப்புகள் அதிகமாக உள்ளதாக புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் நகர அமைப்பு ஆய்வாளர் டெய்சி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் காந்தி மைதானம் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ஆக்ரமிப்புகளை அகற்றினர்.இந்தப் பணி தொடரும் என நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
+
Advertisement