Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் விளம்பர விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் விளம்பர விழிப்புணர்வு வாகனத்தினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் வரும் 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழம்பியில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, தேர்தல் விளம்பரம் விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு, தேர்தல் விளம்பர விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி சாலையோர கடை வியாபாரிகள், பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் பயணாளிகள், தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கு, தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) க.சங்கீதா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.