உடன்குடி,ஜூன் 7: உடன்குடி அருகேயுள்ள சொக்கன்விளை சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுயம்பு (70). இவரது மனைவி விஜயலட்சுமி. தம்பதியினருக்கு 3 மகன்கள். நேற்று முன்தினம் இரவு சுயம்பு உடன்குடிக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். பிறைகுடியிருப்பு பஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த கார் இவரது மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுயம்பு பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்து விரைந்துவந்த மெஞ்ஞானபுரம் போலீசார், சுயம்புவின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய கார் மற்றும் அதை ஓட்டிவந்த ஓட்டுநர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement