Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டப்பை மனோகரன், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினர். திமுக நிர்வாகிகள் இல்ல திருமணத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திருப்போரூர்: தேர்தலில் வெற்றி பெற, இன்னும் 8 மாதங்கள் நாம் கடுமையாக உழைத்து, மக்களளிடம் நமது திட்டங்களை எடுத்து சொன்னால் நாம் வெற்றி பெறுவது உறுதி என திருப்போரூரில் திமுக நிர்வாகிகள் இல்ல திருமண நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ் செல்வி ஆகியோரின் மகன் செங்குட்டுவனுக்கும், முன்னாள் அச்சரப்பாக்கம் எம்எல்ஏ மதிவாணன் கீதா ஆகியோரின் மகள் பிரித்திகாவுக்கும் நேற்று காலை திருப்போரூரில் திருமணம் நடைபெற்றது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ் வரவேற்றார். திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, மணமக்களுக்கு மங்கல நாணை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர், அவர் பேசுகையில்; ``இன்றைய தினம் நம் அனைவரின் வாழ்த்துகளுடன் திருமணம் நடைபெறும் மணமகன் செங்குட்டுவன் நமது தலைவர் கலைஞரால் பெயர் சூட்டப்பட்டவர்.

செங்குட்டுவனின் சகோதரிக்கும் என் தலைமையில்தான் திருமணம் நடைபெற்றது என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் பெருமை அளிக்கக் கூடியது.மணமகனின் தந்தை தேவராஜ், கழகத்தில் கீழ் மட்டத்தில் பொறுப்பு வகித்து தற்போது பேரூராட்சி தலைவர், நகர செயலாளர் பொறுப்புகளுக்கு வந்து கட்சிப் பணியும், மக்கள் பணியும் செய்து வருகிறார். தலைவர் கலைஞர் சிறை சென்றபோது, அதே சிறையில் உடன் இருந்த பெருமையும் தேவராஜிக்கு உண்டு. கழகத்திற்காக 5 முறை சிறையில் அடைக்கப்பட்டவர். தற்போது, திருமணங்கள் மேட்ரிமோனியல் மூலம் நிச்சயிக்கப்படுகின்றன. நான் இந்த திருமணத்தின் மூலமாக சொல்லிக்கொள்வது என்னவெனில் தேவராஜின் வழியை பின்பற்ற வேண்டும்.

அவரது வாரிசுகள் அனைவரையும் கழக குடும்பங்களையே பார்த்து பார்த்து திருமணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் கழகமும் வலுப்பெறுகிறது, கழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களும் வலுப்பெறுகிறது. வரும் வழியில் மக்களை சந்தித்தபடி வந்தேன். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. அடுத்த முறையும் திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பது அவர்களின் முகத்தையும், எழுச்சியையும் பார்க்கும்போதே தெரிகிறது. ஆகவே, அந்த வகையில் இன்னும் 8 மாதங்கள் நாம் உழைத்தால் மக்களிடம் நமது திட்டங்களை எடுத்துச் சொன்னால் போதும் நாம் வெற்றி பெறுவது உறுதி. மணமக்கள் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். மணமக்கள் நல்ல நண்பர்களாக விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்’’ என்றார்.

இந்த திருமணத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், செய்யூர் மு.பாபு, எஸ்.எஸ்.பாலாஜி, முன்னாள் எம்.பி விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் வீ.தமிழ்மணி, மீ.ஆ.வைத்தியலிங்கம், ஆர்.டி.அரசு, டி.மூர்த்தி, காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்தரமேரூர் சுந்தர் எம்எல்ஏ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை தலைவர் வன்னி அரசு, காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவர் ப