ஸ்ரீ வில்லிபுத்தூர், ஜூலை 9: ஸ்ரீ வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முன்னாள் துணை ஆளுநர் முத்துராமலிங்க குமார், அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை மருத்துவர் காளிராஜிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளர் சின்னதம்பி, பொருளாளர்.முத்துவேல்ராஜா, முன்னாள் டவுன் ரோட்டரி சங்க தலைவர்கள் சரவணகுமார், செல்வகுமார், ஜெயராஜ் மற்றும் நந்தகோபால், உறுப்பினர் அலெக்ஸ் ரூபன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.