திருச்செங்கோடு, ஜூலை 14: திருச்செங்கோடு தாலூகா பொம்மன்பட்டியை சேர்ந்தவர் கவினிதா (23). கூலி தொழிலாளி. இவரது மகள் ஜோஸ்னா (3). சில வாரங்களுக்கு முன்பு குழந்தை தெருவில் விளையாடி கொண்டிருந்த போது, தெருநாய் கடித்ததில் இடது காது அறுந்து விட்டது. காதை ஒட்டவைக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. இதற்காக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் ரூ.25ஆயிரம் வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதன்படி, நேற்று குழந்தை ஜோஸ்னாயின் மருத்துவ செலவுக்கு ரூ.25ஆயிரம் காசோலையை, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, குழந்தையின் தாய் கவினிதாவிடம் வழங்கினார். திருச்செங்கோடு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, துணை அமைப்பாளர்கள் நவலடி ராஜா, கதிரவன், பூக்கடை சுந்தர், இளைஞரணி திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.