Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி

நாகர்கோவில், ஜூலை 8 : குமரி மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் 2 நாட்கள் நடந்தது. போட்டியை மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து 87 அணிகள் பங்கேற்றன. இதில் 44 பள்ளி அணிகள் கலந்து கொண்டன. போட்டியானது 14, 17, 19 வயதுக்கு உட்பட்டவர்கள், கல்லூரி மற்றும் பொது என 9 பிாிவுகளாக நடந்தது. போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் மேல்பாலை புனித மேரிஸ் பள்ளி முதல் பரிசையும், மாணவிகள் பிரிவில் தடிக்காரன்கோணம் சிஎம்எஸ் பள்ளி முதல் பரிசையும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் மேல்பாலை புனித மேரிஸ் பள்ளி முதல் பரிசையும், மாணவிகள் பிரிவில் தடிக்காரன் கோணம் சிஎம்எஸ் பள்ளி முதல் பரிசையும் பெற்றன.

19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் மேல்பாலை புனித மேரிஸ் பள்ளி முதல் பரிசையும், மாணவிகள் பிரிவில் மருதங்கோடு  கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி முதல் பரிசையும், கல்லூரி மாணவர்கள் பிரிவில் மார்த்தாண்டம் என்எம்சிசி கல்லூரி முதல் பரிசையும், மாணவிகள் பிரிவில் நாகர்கோவில் ஐயப்பா கல்லூரி முதல் பரிசையும் பெற்றன. கிளப் பிரிவில் டேனியல் கிளப் முதல் பரிசு பெற்றது. பரிசு வழங்கும் விழாவுக்கு ஹேண்ட்பால் சங்க பொது செயலாளர் வளர் அகிலன் தலைமை வகித்தார். தலைவர் கில்டர்ஸ் ராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர், எஸ்எல்பி பள்ளி தலைமையாசிரியர் சத்தியசீலன், திமுக அணி அமைப்பாளர்கள் அருண் காந்த், எம்.ஜே.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய மின்தடை

தக்கலை மின் விநியோக செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தக்கலை உப மின் நிலையத்தில் மற்றும் உயர் மின்அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் 9ம்தேதி (நாளை) காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை தக்கலை, மணலி, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூர், வீராணி, தோட்டிகோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூர், சேவியர்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போர்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சாமியார்மடம், மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை ஆகிய இடங்களுக்கும், அதனை சார்ந்த துணை கிராமங்களிலும் மின்சாரம் இருக்காது.