நத்தம், அக். 14: நத்தம் ஒன்றிய அலுவலகம் அருகே வேலம்பட்டி ஊராட்சி அலுவலகம் உள்ளது. இங்குள்ள நர்சரி பகுதியில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று பதுங்கியது. இதைப் பார்த்த அலுவலக பணியாளர் ஜெயராம் நத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் குழு பதங்கிய பாம்பை உயிருடன் மீட்டனர்.
அது 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு என்பதை அறிந்த அவர்கள், அதை நத்தம் வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.