பழனி, அக். 13: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோவயிலான திருஆவினன்குடி கோயில் மிகவும் சிறப்பு பெற்றது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் கோயில் அர்த்த மண்டப கதவு வெள்ளி தகடுகள் சேதமடைந்திருந்து.
அதை சீரமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் கரூரை சேர்ந்த பக்தர் பங்களிப்புடன் புதிய வெள்ளித்தகடு மாற்றும் பணி நடந்தது. இந்த பணிகள் நிறைவு அடைந்ததால் நேற்று கோயிலில் புனராவாஹான பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் தலைமையிலான சிவாச்சாரியர்கள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.