நத்தம், அக். 13: நத்தம் பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் எஸ்ஐ கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நத்தம் தர்பார் நகர் பகுதியில் அய்யாபட்டியை சேர்ந்த கனகராஜ் (32) என்பவர் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement