திண்டுக்கல், அக்.7: திண்டுக்கல் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் சரவணன் பெற்றுக்கொண்டார்.
திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 277 மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஒ. ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், மகாலிங்கம், துணை ஆட்சியர் பயிற்சி ராஜேஸ்வரி சுவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரப்பினர் நல அலுவலர் சுகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.