நத்தம், அக். 23: நத்தம் ஒன்றியம், என்.புதுப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவரும், திமுக மத்திய ஒன்றிய செயலாளருமான சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் விஜயன், தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பேரூர் செயலாளர் ராஜ்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, ஒன்றிய ஆணையாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரவிந்திரன் வரவேற்றார்.
இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து வருவாய், ஊரக வளர்ச்சி, மகளிர் திட்டம், ஆவின், காவல், வனம், கூட்டுறவு, மின்சாரம், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை அலுவலர்களால் உடனடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்து 45 நாட்களில் தீர்வு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு அதற்கான சான்றிதழ்கள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், ஊராட்சி செயலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.