திண்டுக்கல், அக். 31: திண்டுக்கல் ஆர்எம் காலனியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு டூவீலரில் வந்த 2 பேர், பேராசிரியை வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் திண்டுக்கல் தாமரைப்பாடியை சேர்ந்த மதன் (24), ஏர்போர்ட் நகரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (22) ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
 
  
  
  
   
