கோபால்பட்டி, அக். 31: கோபால்பட்டி அருகே அதிகாலையில் அரசு பேருந்து சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் கண்டக்டர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை சுமார் 25 பயணிகளுடன் அரசு பேருந்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றது. பேருந்தை தேவகோட்டையை சேர்ந்த கேசவன் என்பவர் ஓட்டி வந்தார்.
கோபால்பட்டி அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் கண்டக்டர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
  
  
  
   
