நிலக்கோட்டை, அக். 30: நிலக்கோட்டையில் பேரூர் திமுக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐபி.செந்தில்குமார் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூர் செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை தலைமை வகித்தார். பேரூர் துணை தலைவர்கள் கதிரேசன், மணி ராஜா முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் காளிமுத்து வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தெற்கு ஒன்றிய செயலாளரும், வழக்கறிஞருமான மணிகண்டன் 1000க்கும் மேற்பட்ட சாலையோர ஏழை, எளிய பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம், போர்வைகள் ஆடைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், குட்டி (எ) பால்கனக ரத்தினராஜ் மற்றும் இளைஞரணியினர், மாணவரணியினர், மகளிரணியினர் என பலர் கலந்து கொண்டனர்.
