வேடசந்தூர், ஆக. 30: அய்யலூர் அருகேயுள்ள பஞ்சம்தாங்கி பகுதியில் வனத்துறையினருக்கு சொந்தமான இடத்தின் வழியே சிலர் டிராக்டர்கள் செல்ல வசதியாக புதிய பாதை அமைத்தனர். இவ்வாறு காப்பு காட்டில் அனுமதியின்றி பாதை அமைத்தால் வன ளம் மற்றும் விலங்குகள் பாதிப்படையும் என கூறி வனத்துறையினர் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு புதிய வழித்தடத்தை மூடினர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் நேற்று பாதை அமைக்க அனுமதி வேண்டும் என கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், வனத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தவறான நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டார்கள். குறைகள் ஏதுமிருந்தால் அதிகாரிகளிடம் மனு தந்து தீர்வு பெற்று கொள்ளலாம் என கூறினர். அதன்பிறகே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.