ஒட்டன்சத்திரம், ஆக. 29: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் நெகிழி பை ஒழிப்பு மற்றும் சுற்றுப்புற சூழல் மாசுபாடு திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்து. கல்லூரி தாளாளர் வேம்பணன், கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமை வகித்தனர்.
தொடர்ந்து மாணவிகள் பேரணியாக சென்றனர். இதில் நெகிழி மாசுபாட்டை தடுப்பது ஒவ்வொரு குடிமக்களின் கடமை என வலியுறுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பு பணிகளை சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் சிவகாமி நந்தினி, காயத்ரி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் செய்திருந்தனர்.