திண்டுக்கல், ஆக. 29: திண்டுக்கல் வேடப்பட்டி ஞான நந்தகிரி நகரை சேர்ந்தவர் மோகன் (35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி காளீஸ்வரி. 2 பிள்ளைகள் உள்ளனர். மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் அவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கணவன், மனைவியிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மோகன் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் நகர் தெற்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகர், எஸ்ஐ பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.