நத்தம், ஆக. 29: நத்தம் அருகே செந்துறை துணை மின் நிலையத்தில் இன்று (ஆக.29ம் தேதி, வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, மாதவநாயக்கன்பட்டி, மாமரத்துப்பட்டி, களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, மணக்காட்டுர், மங்களப்பட்டி,
குடகிப்பட்டி, கோசுகுறிச்சி, பிள்ளையார்நத்தம் கோட்டைப்பட்டி ஆகிய ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என அறிவிப்பு செய்யப்பட்டு நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று நடைபெற இருந்த இந்த மின் தடையானது நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.