நிலக்கோட்டை, செப். 27: நிலக்கோட்டை ஒன்றியம் பச்சமலையான்கோட்டை ஊராட்சி செம்பட்டியில் புதிய நூலக கட்டிடம் கட்டி தருமாறு அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டியன் நூலகத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல், ஊராட்சி செயலர் ஜெயகணேஷ், ஒன்றிய துணை செயலாளர்கள் ஆரோக்கியம், அழகேசன், அண்ணாதுரை, இளைஞரணி அமைப்பாளர் செம்பர சுரேஷ், கட்சி நிர்வாகிகள் நாட்ராயன், பொன்னையா, சங்கர், பதினெட்டாம்படி, காட்டு ராஜா, ரகுபதி, கிருஷ்ணன், சோலை ரவி, டேவிட், பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.