வேடசந்தூர், ஆக. 27: அய்யலூர் அருகேயுள்ள தீத்தாகிழவனூர் பகுதியில் வடமதுரை காவல் நிலைய எஸ்ஐ பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அக்காகுளம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது, சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூக்கர பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (25), வேங்கனூரை சேர்ந்த பெருமாள் (30), தீத்தாகிழவனூரை சேர்ந்த ராசு (35), ஜி.குரும்பபட்டியை சேர்ந்த தங்கராஜ் (51) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.500 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.