பழநி, செப். 26: பழநி ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்ட பணிகள் குறித்து தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் பிரசாரம் மேற்கொண்டனர். பழநி ரயில்வே எஸ்ஐ கணேசன் தலைமை வகித்தார். தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
ரயில் நிலையத்தில் நின்ற பயணிகளிடமும், ரயிலில் சென்ற பயணிகளிடமும் மாணவிகள் தூய்மை இந்தியா திட்ட பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து ரயில் நிலைய நடைமேடைகள் மற்றும் தண்டவாள பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொண்டனர்.