திண்டுக்கல், செப். 25: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள், வீரமங்கையர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜூ தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் படை வீரர்களுக்காக செயல்படும் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து முறையாக தெரிவிக்க வேண்டும், முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்க அலுவலக தொலைபேசி எண்ணை செயல்பாட்டில் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.