பழநி, செப். 25: பழநியில் பெண் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் தொல்லை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து தவறான வார்த்தைகளால் குழந்தைகளை பேசுதல், கேலி மற்றும் கிண்டல் செய்தல், ஆபாச படங்கள் காண்பித்தல், குழந்தைகளில் உடல் பாகங்களை தவறான நோக்கத்துடன் தொடுதல், குழந்தை தொழிலாளர், குழந்தை கடத்தல், குழந்தை திருமண பாதிப்பு, தடுப்பு சட்டங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் குழந்தை திருமண தடுப்பு, பாலியல் தொந்தரவு மற்றும் காவலர் தொடர்பு போன்றவைகளுக்கான 1098, 181, 100 அவசர எண்களின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.