பழநி, அக். 24: பழநி அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இம்முகாமில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்பங்கள், அதனை தடுக்கும் முறைகள், அதற்கான தண்டனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இளம் வயது திருமணத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
+
Advertisement 
 
  
  
  
   
