வத்தலக்குண்டு, ஆக. 23: வத்தலக்குண்டு அருகே குட்கா- புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியில் பெட்டி கடை வைத்திருப்பவர் மல்லிகா (60). இவர் கடையில் குட்கா- புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கவுதம், எஸ்ஐ சேக் அப்துல்லா மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது அதே ஊரை சேர்ந்த லைலா பானு (20) என்பவர் டூவீலரில் வந்து மல்லிகா கடைக்கு குட்கா- புகையிலை பொருட்களை சப்ளை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 15 கிலோ குட்கா- புகையிலை பொருட்கள், ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர்.