நிலக்கோட்டை, ஆக. 22: சின்னாளபட்டி அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் மையத்தின் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உணவு பாதுகாப்பு துறை சார்பிலும், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள உணவுப்பதப்படுத்துதல் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கான 2 நாள் தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து அறுவடை மற்றும் அறுவடைக்குப் பின் பழங்கள், காய்கறிகளை பதப்படுத்துவது, பாதுகாப்பது, பேக்கிங் செய்வது குறித்த அறிவுரைகள் பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உணவு பதப்படுத்துதல் பொறியியல் துறையின் பேராசிரியர் அமுதசெல்வி, காந்திகிராம வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.