திண்டுக்கல், ஆக. 22: திண்டுக்கல் பகுதியில் தாலுகா போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபர்களை சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
மேலும் கஞ்சா விற்பனை செய்த மதுரையை சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் சுரேஷ்குமார் (24), தனசேகரன் மகன் அமிதேஷ் கார்த்திக் (20), பாண்டிகுமார் மகன் சஞ்சய் (19) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து .வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.