நிலக்கோட்டை, ஆக. 21: நிலக்கோட்டை நடராஜர்புரத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (49). எலக்ட்ரிசீயன். இவர் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்த பழைய பொருட்களை வீட்டின் முன்பு கொட்டி வைத்திருந்தார். இவை மர்மமான முறையில் அடிக்கடி திருடு போய் வந்தது. விசாரித்ததில் அவரது உறவினர் சவுந்திரபாண்டி (74), பழைய பொருட்களை திருடி விற்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் நிலக்கோட்டை போலீசார் சவுந்தரபாண்டி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement