நத்தம், நவ. 19: நத்தத்தில் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் தங்களை தரக்குறைவாக பேசியதாகக் கூறி பிளஸ்2 மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து பள்ளி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் காவல் நிலைய எஸ்ஐ அருண்பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு மீண்டும் வகுப்புகளுக்கு சென்றனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


