கொடைக்கானல், நவ. 19: கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடும் குளிரும் நிலவி வருகிறது. 10 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவி வருவதால் நாள் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. தற்போது பனி சீசன் தொடங்கி உள்ள நிலையில், நேற்று காலை முதல் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
கடும் குளிர், சாரல் மழை, பனி மூட்டம் காரணமாக கொடைக்கானலில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக சென்று வருகின்றனர்.


