திண்டுக்கல், செப். 19: திண்டுக்கல் அருகே தண்டல்காரன்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (48). கூலித்தொழிலாளி. இவரும் அவரது நண்பர் ஞானப்பிரகாசமும் நேற்று வனத்து சின்னப்பர் கோயில் பிரிவு அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நல்லாம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (20) தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து ராமச்சந்திரன் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து, அவரது பாக்கெட்டிலிருந்த ரூ.800 பணத்தை பறித்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ அங்கமுத்து வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
+
Advertisement