நத்தம், செப். 18: நத்தம் அருகே கும்பச்சாலையை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (30). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் நத்தம் வந்துவிட்டு கும்பச்சாலையை நோக்கி அதே பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (40), தங்கம் (32) ஆகியோரை ஏற்றிக் கொண்டு சென்றார். விரிச்சலாறு பாலம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் வெள்ளைச்சாமி, தங்கம் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.