திண்டுக்கல், செப். 18: திண்டுக்கல் தையல் தொழிலாளர் சங்கம் மற்றும் சிஐடியூ சார்பில் 40க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு தையல் தொழிலாளர் நலவாரியத்திற்கு தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும்.
தொழிலாளர்களுக்கு மாநில அளவில் முத்தரப்பு குழு அமைக்க வேண்டும். ஓய்வூதிய தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கூட்டுறவு தையல் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, தீபாவளி போனஸ், கூலி உயர்த்தி வழங்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகமே தையல் கடைகளுக்கு வர்த்தக உரிமை கட்டணம் கட்டுவதற்கு நிர்பந்திக்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.