ஒட்டன்சத்திரம், அக். 17: ஒட்டன்சத்திரத்தில் ஜாக்டோ, ஜியோ சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மகாராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் வட்டக்கிளை தலைவர் மணிமாறன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டமைப்பு முத்துக்குமார், பட்டதாரி ஆசிரியர் கழகம் வேல்முருகன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு லாசர், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சங்கம் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.