திண்டுக்கல், செப். 17: திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்தனர்.
மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி ஊராட்சி செட்டியபட்டி மற்றும் கோடாங்கிபட்டி பகுதியில் ஆதிதிராவிடர் பொதுமக்கள், 50க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். அனைவரும் கூலி தொழிலாளிகள். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.