கொடைக்கானல், செப்.16: கொடைக்கானல் துணை மின் நிலையம் மற்றும் உயரழுத்த மின் பாதைகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி கொடைக்கானல், அட்டுவம்பட்டி பள்ளங்கி, வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர் பழம்புத்தூர், கவுஞ்சி, கிளாவரை, வடகவுஞ்சி, பெரும்பள்ளம், மேல் பள்ளம், சவரிக்காடு, ஊத்து, மச்சூர், பேத்துப்பாறை, பெருமாள்மலை, பிஎல் செட், சாமகாட்டு பள்ளம், சவரிக்காடு, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, குப்பம்மாள் பட்டி, கடைசி காடு, பெரியூர், பாச்சலூர், கேசி பட்டி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என வத்தலகுண்டு மின்சார வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
+
Advertisement