வத்தலக்குண்டு, செப்.16: வத்தலக்குண்டு அருகே கட்டக்காமன்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா(70). விவசாய தொழிலாளி. இவர் நேற்று காலை, தான் வளர்த்து வரும் ஆட்டிற்கு, தீவனம் பறிக்க தோட்ட பகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில், கால் தடுமாறி கிணற்றி உள்ளே விழுந்தார். கிணற்றில் தண்ணீர் இருந்தால் நீச்சலடித்து, கிணற்றின் ஓரத்தில் வந்து நின்றவாறு கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயிகள், இது குறித்து வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தொட்டியுடன் கூடியகயிறு கட்டி முதியவரை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து அவரது உறவினர்களும், ஊர் மக்களும் தீயணைப்பு துறையினருக்கு நன்றி கூறினர்.
+
Advertisement