Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேசிய மகளிர் கால்பந்து போட்டி கேரளாவை வென்றது தமிழகம்

திண்டுக்கல், செப். 15: கேரள மாநிலம் பாலக்காட்டில் 30வது தேசிய மகளிர் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி முதல் போட்டியில் பாண்டிச்சேரி அணியை 13:0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி பலம் வாய்ந்த கேரளா அணியை 2:1 என்ற கோல் கணக்கில் வென்றது. தமிழ்நாடு அணியில் பிரியதர்ஷினி, சேரன் ஆகியோர் கோல் அடித்தனர். இத்தகவலை கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.