வத்தலக்குண்டு, செப். 15: வத்தலக்குண்டு வில் கஞ்சா கடத்திய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். வத்தலக்குண்டு காந்தி நகரை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (45). ஆட்டோ டிரைவர். இவர் கஞ்சா கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்ஐக்கள் ஷேக் அப்துல்லா, பாண்டியராஜன், ஜாபர் மற்றும் போலீசார் விரைந்து சென்று காந்தி நகர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த லஷ்மி நாராயணனை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரிடமிருந்த பையில் சோதனை நடத்திய போது அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லஷ்மி நாராயணனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.