ஒட்டன்சத்திரம், நவ. 12: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டன்சத்திரத்தில் பேரணி நடைபெற்றது. கிறிஸ்டியன் கல்லூரி வளாகத்தில் துவங்கிய இப்பேரணி பழநி சாலை வழியாக ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் முன்பு நிறைவு பெற்றது.
பேரணியில் கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் சஞ்சய்காந்தி, டிஎஸ்பி கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு பாண்டியன், நகராட்சி ஆணையாளர் ஸ்வேதா, சுகாதார ஆய்வாளர் ராஜமோகன், கல்லூரி முதல்வர் பரிமள கீதா, துணை வட்டாட்சியர்கள் அன்சாரி, முருகேசன், வருவாய் ஆய்வாளர் பூரணி, கிராம நிர்வாக அலுவலர்கள் சிவராஜன், பாபு, வரதராஜன், கிராம உதவியாளர்கள் விஜயபாஸ்கரன் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள், போலீசார், வருவாய் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
