திண்டுக்கல், நவ. 12: திண்டுக்கல்லில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அவை தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பழனிச்சாமி, செல்வேந்திரன், மோகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராகவன் வாழ்த்துரை வழங்கினார். இக்கூட்டத்தில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். பெருகி வரும் போதை பொருட்களை தீவிரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றிய அரசு தமிழக மக்கள் மீது திணிக்கும் எஸ்ஐஆரை கண்டித்து மதிமுக பொது செயலாளர் வைகோ ஜனவரி 2ம் தேதி திருச்சி முதல் மதுரை வரை நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் நடை பயணத்தில் அதிக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
