பழநி, செப். 12: பழநி அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் புகழேந்தி. ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் நேற்று தனது 5 ஆடுகளை அப்பகுதியில் உள்ள குளத்தில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது குளத்திற்குள் புகுந்த வெறி நாய்கள் கூட்டம் ஆடுகளை விரட்டி கடிக்க துவங்கின.
ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த புகழேந்தி நாய்களை விரட்ட முற்பட்டுள்ளார். அதற்குள் நாய்கள் ஒரு ஆட்டை கடித்து குதறி விட்டன. இதில் அந்த ஆடு உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழநி பகுதியில் சுற்றி திரியும் வெறிநாய்களை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.